Sunday 18 March 2018

கருத்து வாக்கியம் (Auto Suggestion - சுய கருத்துப்பதிவு)

கருத்து வாக்கியம்

·       உங்களுக்கு ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டும் ஆனால் அதற்கு தகுந்த கருத்து வாக்கியத்தை மனதில் உறுதியாக பலமுறை சொல்லிவாருங்கள். சில தினங்களில் உங்கள் காரியம் நிறைவேறும்.

·       உதாரணமாக, நீங்கள் ஒரு நோயால் அவஸ்தைப்பட்டால் முன்போல் மன சலனத்தில் ஈடுபடாமல் தனியாய் இருந்துகொண்டு மெதுவாகஎன் நோய் குணப்படுகிறதுஎன்று நம்பிக்கையுடன் மனதில் விடாமல் பலமுறை சொல்லி வாருங்கள். படிப்படியாய் குணப்படுவதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

·       உதாரணமாக என் நோய் குணமாகிறது ; என் குடிப்பழக்கம் மாறுகிறது; என் கடன்கள் தீருகின்றன; என் காரியம் வெற்றி அடைகிறது; என் வியாபாரம் விருத்தியாகிறது. இப்படி உண்மையான தேவைகளை வாக்கியமாக அமைத்துக்கொண்டு தினம் 50 முதல் 60 தடவை மெதுவாக மனம் ஒன்றி நம்பிக்கையோடு சொல்லுங்கள்.  மெல்லமெல்ல காரியம் வெற்றி அடையும்.

·       வேற எந்த எண்ணமும் இல்லாமல் ஒரே மனத்துடன் மெதுவாக தெளிவாக உறுதியாக மனதில் உற்சாகத்துடன் நம்பிக்கையோடு கருத்து வாக்கியங்களை சொல்ல வேண்டும்.

குறிப்பு:
பேராசையால் தேவை இல்லாதவைகள் கிடைக்க வேண்டும் என்று சாதனை செய்தால் வெற்றி அடையமாட்டீர்கள்.
கருத்து வாக்கியம் எதிர்காலத்தை குறிப்பதாக இருக்க கூடாது. 


எளிய சுவாசப் பயிற்சி, எளிய தியான பயிற்சி


எளிய சுவாசப் பயிற்சி, எளிய தியான பயிற்சி


முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து, அமைதியாக, மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பகத்தை செய்திடாமல் மெல்ல, மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து எஃது நடந்தாலும், சிந்தனை எத்தனை தடுமாற்றம் அடைந்தாலும், சிந்தனை எங்கு அலைந்து, திரிந்து, திளைத்து சென்றாலும், எத்தனை குழப்பம் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை கொண்டு பார்க்கப் பழக வேண்டும். 

ஆர்வமிகுதியால் அதிகமாக செய்யக்கூடாது