Friday, 31 May 2019

Manthira Chavi (Secret Of The Mind) மந்திரச் சாவி By Nagoor Rumi





உணர்ச்சியை காட்டுவது வேறு. உணர்ச்சிக்கு அடிமையாகி உணர்ச்சிவசப்படுவது வேறு. அவசியம் கருதி உணர்ச்சியை காட்டலாம்.ஆனால் உணர்ச்சிவசப் படக் கூடாது. காரணம், உணர்ச்சியை காட்டும்போது அது நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் உணர்ச்சிவசப் படும்போது நாம் உணர்ச்சியின் கட்டுபாட்டில் இருக்கிறோம். உணர்ச்சிவசப்படாமல் உணர்ச்சியைக் காட்டுவதுதான் எமோஷனல் இன்டலிஜென்ஸ். உணர்ச்சியோடு அறிவை கலப்பது எப்படி என்பதை சுவாரசியமான மொழியில் சொல்லும் இப்புத்தகம், ஏற்கனவே கல்கியில் தொடராக வந்து பாராட்டுகளைப் பெற்றது.
நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றும் ரூமி, தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனம் பெற்றவர்.இதுவரை இவர் 38 நூல்களை எழுதியுள்ளார்.

Rs.100.00

http://www.vijayapathippagam.com/index.php/authors/authors-col3/more-authors/nagoo-rumi/mandhirach-chaavi-detail

http://marinabooks.com/detailed?id=5%205256&name=%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF

No comments:

Post a Comment