கருத்து வாக்கியம்
·
உங்களுக்கு ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டும் ஆனால் அதற்கு தகுந்த கருத்து
வாக்கியத்தை மனதில் உறுதியாக பலமுறை சொல்லிவாருங்கள். சில தினங்களில் உங்கள்
காரியம் நிறைவேறும்.
·
உதாரணமாக, நீங்கள்
ஒரு நோயால் அவஸ்தைப்பட்டால் முன்போல் மன சலனத்தில் ஈடுபடாமல் தனியாய் இருந்துகொண்டு
மெதுவாக’ என்
நோய் குணப்படுகிறது’ என்று
நம்பிக்கையுடன் மனதில் விடாமல் பலமுறை சொல்லி வாருங்கள். படிப்படியாய்
குணப்படுவதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
·
உதாரணமாக என் நோய் குணமாகிறது ; என்
குடிப்பழக்கம் மாறுகிறது; என்
கடன்கள் தீருகின்றன; என்
காரியம் வெற்றி அடைகிறது; என்
வியாபாரம் விருத்தியாகிறது. இப்படி உண்மையான தேவைகளை வாக்கியமாக அமைத்துக்கொண்டு
தினம் 50 முதல் 60 தடவை மெதுவாக மனம் ஒன்றி நம்பிக்கையோடு சொல்லுங்கள். மெல்லமெல்ல காரியம் வெற்றி
அடையும்.
·
வேற எந்த எண்ணமும் இல்லாமல் ஒரே மனத்துடன் மெதுவாக தெளிவாக உறுதியாக மனதில்
உற்சாகத்துடன் நம்பிக்கையோடு கருத்து வாக்கியங்களை சொல்ல வேண்டும்.
குறிப்பு:
பேராசையால் தேவை இல்லாதவைகள்
கிடைக்க வேண்டும் என்று சாதனை செய்தால் வெற்றி அடையமாட்டீர்கள்.
கருத்து வாக்கியம் எதிர்காலத்தை
குறிப்பதாக இருக்க கூடாது.
No comments:
Post a Comment