நுரையீரல்களிலே
சிறிய காற்றுப் பைகள் பல உள்ளன. சுவாசமிடுதல் என்பது இந்தப் பைகளை நிரப்ப்ய்வதும்,
காலிசெய்வதும்தான்.
பிராணவாயுவைப்
‘பூரகம்’ என்னும் உள் இழுத்தல் பண்ணும் போதெல்லாம் நுரையீரல்கள் நன்றாக விரிவதற்கு
ஏராளமாக இடமுண்டாகும்படி, உட்காரும் போதும் நிமிர்ந்திருத்தல் வேண்டும். இப்படிச்செய்தால்
உடம்புக்குப் பிராணவாயு அதிகமாகக் கிடைக்கிறது. நிமிர்ந்து உட்கார்ந்து, நிமிர்ந்து
நிற்பதனால் உடம்பு உரம்பெற்று திடமாவதற்கு ஏதுவாகிறது. முதுகைக் கூனவைத்துக் கொண்டு
நிற்பதாலும், உட்காருவதாலும் நம்மைப் பார்ப்பவர்களுக்கு நாம் அசிங்கமாகத் தோன்றுவோம்
மேலும் கூனலால்
நுரையீரல்கள் நன்றாக விரிவதற்கு வசதி ஏற்படாமல் போகிறது. போதுமான அளவு காற்று உடலுக்கு
கிடைக்காமற் போவதால், உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன வீட்டுக்குள் வேலை செய்து வருபவர்களும்,
உட்கார்ந்து வேலை செய்பவர்களும், ஒவ்வொரு நாளும் பலமுறை எழுந்து நின்று பல ஆழ்ந்த மூச்சுகளை
எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். இப்படிச் செய்தால்தான் இவர்களுடைய
நுரையீரல்கள் முழுவதும் நல்ல காற்றால் நிரம்பி,, விசப்பொருள் முழுவதும் வெளியேறும்
இத்தகையவைர்களுக்கு எந்த நோயும் வராது.
No comments:
Post a Comment