Sunday, 31 March 2019

ஆழ்மனத்தைப் பயன்படுத்தும் சுலப வழிமுறை

உங்கள் ஆழ்மனத்தின் சக்தியை

அறிந்துகொள்ளுங்கள்

அதைப் பயன்படுத்தி உங்களை ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்

1) நம்பிக்கை - நாம் ஆழ்மனதை பயன்படுத்தும் இப்பயிற்சியினை மிகவும் நம்பிக்கையுடன் பரபரப்பு இன்றி நிதானமாக செய்ய வேண்டும்.

2) கருத்து வாக்கியம் - ஒரே குறிக்கோளை தேர்ந்தெடுத்து அதற்கான கருத்து வாக்கியத்தை (நேர்மறை வாக்கியங்களால்) அமைத்து கொள்ளவும். உதாரணமாக : ”நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்”.

3) நிர்மலமான மனம் - மனம் அமைதியாக தெளிவாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் கூறும் கருத்து வாக்கியம் ஆழ்மனதில் பதியும்.


4) மனக்காட்சி - ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலைசேசன் (Creative Visualization) என்று பெயர். இதை படக்காட்சியாகக் கற்பனை செய்துபார்த்தல் எனக்கூறலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த ஆழ்மனக்கட்டளையை (கருத்து வாக்கியத்தை) உணர்ச்சியுடன் நிதானமாக ஒலி நயத்துடன் உதட்டசையுடன் உருவேற்றுக. உங்கள் குறிக்கோள் நிறைவேறி விட்டாக மனக்காட்சியில் கற்பனை செய்க. உண்னமையில் நிறைவேறியிருந்தால் எவ்வாறு மகிழ்ச்சி அடைவீர்களோ அவ்வாரே மனக்காட்சியில் அந்த உணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.

தினமும் காலை மாலை இருவேலைகளில் 20  நிமிடம் விடாமல் செய்ய வேண்டும்.


https://zerotoinfinitude.com/how-to-visualize-what-you-want-the-right-method

How to use Subconscious Mind (Simple easy 3 steps) Calm and clear mind is needed


1) concise positive words

2) clear visualization for minimum 20 minutes
3) corresponding feeling (emotion)



ஆழ்மனது நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கை போன்றவற்றை வைத்தே செயல்படும்.
செல் உயிரியலாளர் டாக்டர் ப்ரூஸ் லிப்டன் ஆய்வில், 'நம்முடைய நம்பிக்கைகள் டி.என்.ஏ.,வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது' என்று கூறியுள்ளார்.
நம்முடைய நம்பிக்கைகள் நேர்மறையாக இருந்தால் அவை நமக்குள் இருக்கும் பழைய டி.என்.ஏ., செல்களின் மேல் புதிய டி.என்.ஏ., செல்களை உருவாக்குகின்றது. இதை 'எப்பிஜெனிடிக்ஸ்' என்று கூறுவர். உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு நம்முடைய எதிர்மறையாக எண்ணங்களே காரணம். இதை மருத்துவர்கள் 'சைக்கோசொமட்டிக் டிஸ்சாடர்' என அழைக்கின்றனர்.
நம்பிக்கையின் சக்தி விஞ்ஞானி டாக்டர் கிரக் ப்ராடன் ஆய்வில், 'நம்முடைய உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகள் நம்முடைய உடலை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது' என கூறுகிறார்.

No comments:

Post a Comment